முதிர்வு காலத்திலும் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கணுமா..?? அப்ப இத மட்டும் பண்ணுங்க..!!
மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது NPS என்ற தேசிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்கள் தங்களது முதுமைக் காலத்தில் ஒவ்வொரு மாதமும், நிலையான வருமானத்தை பெற வழிவகை செய்கிறது. மேலும், இத்தகைய திட்டத்தை பற்றியும் இதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றியும் வாருங்கள் பார்க்கலாம்.
அதாவது, ஒரு நபர் 35 வயதில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கினால், அவரின் 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். அதாவது, ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாயை 25 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், மொத்த முதலீடு 45,00,000 ரூபாயாக இருக்கும். இதற்கு 10% வட்டி வீதம் 25 வருடங்களுக்கு மொத்த வட்டியாக ரூ.1,55,68,356 கிடைக்கும். அந்த வகையில் அவர்கள் 60 வயது அடையும் போது முதலீடு செய்த பணத்துடன் வட்டியை சேர்த்தால் (45,00,000+1,55,68,356)= ரூ.2,00,68,356 கிடைக்கும். இதில் 60% தொகையை (ரூ.1,20,41,014) ஐ மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மீதம் 40% தொகை (ரூ. 80,27,342) உங்கள் பென்ஷன் பணமாக மாறும். இது 8% வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.53,516 பென்ஷன் தொகையாக கிடைக்கும். மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


























