IND vs NZ 1st Test 2024: கனமழை எதிரொலி.. கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (அக்டோபர் 16) நடைபெற இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் ?? திடீர் மாற்றம்.. வெளியான முக்கிய அப்டேட்!!
ஆனால் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு கனமழை பெய்து வருவதால் டாஸ் போடாமலேயே முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், போட்டி கைவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவுள்ள நிலையில், இத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
























