தமிழகத்தில் ரேஷன் வழங்குவதில் புதிய மாற்றம் – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் விரல்ரேகைக்கு பதிலாக அடுத்த சில மாதங்களில் கருவிழி பதிவு முறை நடைமுறைக்கு வரும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரேஷன்:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வரையிலும் விரல்ரேகை பதிவின் மூலமாகவே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு விரல் ரேகை பதிவாவதில்லை. இதனை, சாதகமாக பயன்படுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஏகப்பட்ட குளறுபடிகளில் ஈடுபடுகின்றனர்.
தீவிரமெடுக்கும் ஜிகா வைரஸ் – 7 பேருக்கு தொற்று உறுதி.. அச்சத்தில் மக்கள்!
இந்நிலையில், கைரேகைக்கு பதிலாக கருவிழி மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 2024க்குள் 30% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும், அடுத்த 9 மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி திட்டம் கொண்டு வரப்படும் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, புதிய ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.