உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா..?? அப்போ உடனே இதை செய்யுங்க.. இல்லனா கார்டு கேன்சல் தான்..!!
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசானது ரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானியங்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து, அரசு வழங்கும் மற்ற சலுகைகளை பெறவும் ரேஷன் கார்டு மிகவும் அவசியமாகும். மேலும், ரேஷன் கார்டு KYC சரிபார்ப்பு செயல்முறை என்பது மொபைல் நம்பர், ஆதார் கார்டு மற்றும் கைரேகையை ரேஷன் கார்டுடன் இணைப்பதாகும்.
இந்நிலையில் தற்போது KYC சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 85 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. மேலும், “மத்திய அரசு KYC சரிபார்ப்புக்கான கடைசி நாளாக மார்ச் 31 ம் தேதியை அறிவித்திருந்த நிலையில், அதை தற்போது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதை தொடர்ந்து, உணவு வழங்கல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜெய் பாட்டீல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் விதிக்கப்பட்டுள்ள காலகட்டத்திற்குள் 100 % KYC சரிபார்ப்பு பணிகளையும் முடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த செயல்முறையை முடிக்காத மாநிலங்களுக்கு தானிய ஒதுக்கீடு குறைக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.


























