ALIMCO ஆணையத்தில் AI Engineer காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Artificial Limbs Manufacturing Corporation of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் AI Engineer, Web Portal Support மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ALIMCO-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- AI Engineer, Web Portal Support மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / CA / CMA / MCA / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DRDO ஆணையத்தில் 130+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
- தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ALIMCO-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.04.2025 முதல் 17.04.2025ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























