மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…!! 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு…!! 

0
????????????? ??? ??????? ??????...!! 1 ????? 5 ??? ???????????? ????? ????? ????????? ???????????...!! 
மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி...!! 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு...!! 

மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…!! 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு…!! 

சமீபத்தில்  திருவாரூர் மாவட்டத்திற்கு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் தகவல் ஒன்றை வெளியிட்டார். மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அன்றைய தினம் (ஏப்ரல் 7, 2025) நடைபெற இருந்த, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பாஜக வின் புதிய மாநில தலைவர் யார்…??  சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல்

மேலும், இந்த ஒத்திவைக்கப்பட்ட தமிழ் தேர்வானது மறுநாள் (ஏப்ரல் 8, 2025) செவ்வாய்கிழமை அன்று நடைபெறும் என அறிவித்துள்ளார். இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திருவாரூர் மாவட்ட பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் ஆழி திருத்தேரோட்டத்தை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக   தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!