பாஜக வின் புதிய மாநில தலைவர் யார்…??  சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல்

0
???? ???? ????? ????? ?????? ????...??  ?????????? ?????? ??????? ????? ??????? ?????
பாஜக வின் புதிய மாநில தலைவர் யார்...??  சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல்

பாஜக வின் புதிய மாநில தலைவர் யார்…??  சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல்

 

வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, அதிமுக  தலைமையில்  பாஜக   கூட்டணி அமையும் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதவியில் இருந்து விலக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில், தற்போது வெளியான இந்த செய்தியால், இவை இரண்டும் உண்மை என உறுதியாகி விட்டது. அதன்படி, அடுத்த நான்கு நாட்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய பாஜக மாநில தலைவர் நியமனம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அங்கீகாரம்.. எதற்கு தெரியுமா..? 

மேலும், பாஜகவின் புதிய மாநில தலைவர்களை நியமிக்க, அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, வருகின்ற ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளில், சென்னையில் முகாமிட்டு ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்த உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் பெயர்கள் உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!