மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அங்கீகாரம்.. எதற்கு தெரியுமா..?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை பூ, தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் மாம்பழம் உட்பட 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 நாட்களுக்கு முன்னதாக கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரு பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு…!! பொதுமக்களுக்கு போக்குவரத்து கழகம் அளித்த சர்ப்ரைஸ்
இந்நிலையில் “தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு இன்று (03-03-2025) புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி ஆகிய பொருட்களுக்கு தற்போது புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது”. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 62 இருந்து 69 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



























