பால் உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி.. 2025-2026 பால்வளத்துறை மானியக் கோரிக்கை.. வெளியான சிறப்பு அறிவிப்புகள்..!!

0
???? ???????????????????? ??? ?????????.. 2025-2026 ???????????? ??????? ????????.. ??????? ??????? ????????????..!!
பால் உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி.. 2025-2026 பால்வளத்துறை மானியக் கோரிக்கை.. வெளியான சிறப்பு அறிவிப்புகள்..!!

பால் உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி.. 2025-2026 பால்வளத்துறை மானியக் கோரிக்கை.. வெளியான சிறப்பு அறிவிப்புகள்..!!

 

தமிழக சட்டப்பேரவையின் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து, சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி நிகழும் என்றும், அதில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மற்றொரு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…!! 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு…!! 

அதாவது, நேற்று (02-04-2025) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை குறித்த துயர் தணிப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் 2025 – 2026ம் ஆண்டுக்கான பால்வளத்துறை மானியக் கோரிக்கைகள்   வெளியிடப்பட்டது. அதன்படி “ரூ.9.34 கோடி மதிப்பீட்டில் பாலின் தரத்தை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்க ஏதுவாக1,437 பால் பகுப்பாய்வு கருவிகள் நிறுவப்படும், ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பால் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக தொடங்கப்படும், ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும், ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்” போன்ற பல்வேறு கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!