தமிழகத்தில் மார்ச் 31 வரை கொளுத்தப்போகும் வெயில்…!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர், கடந்த மார்ச் 27 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மேலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (29.03.2025) முதல் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது. மேலும், இந்த வெப்பநிலை உயர்வால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி பிற்பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்றும், ஒருநாளைக்கு 2 – 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.


























