
மாணவர்களின் கவனத்திற்கு.. நான் முதல்வன் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றம்.. செயலாக்கத்துறை அறிவித்த சிறப்பு தகவல்..
தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் “நான் முதல்வன்” என்ற புதிய திட்டத்தை மார்ச் 1,2022 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் “கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் தங்கள் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெற உலகத்தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன”. இந்நிலையில் நான் முதல்வன் குறித்து மற்றொரு முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்…!! உதவிக்கரம் நீட்டும் இந்தியா…!!
அதாவது, நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன், 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த “3 ஆண்டுகளில், 41 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதை மேலும் மேம்படுத்தும் நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்கான உயர் திறன் மையங்கள் நிறுவப்பட உள்ளதாக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அறிவித்துள்ளது”.

























