
தென் மாநிலங்கள் பிறப்பு விகிதத்தை குறைத்தததே பிரச்சனை…!! மோடிக்கு எதிராக பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு..!
சென்னை ஐஐடி யில் நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாடு கடந்த வியாழக்கிழமை அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது. மேலும், அதன் இரண்டாம் நாள் மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தென் மாநிலங்கள் மக்கள் தொகை மேலாண்மையை சிறப்பாக செய்து, பிறப்பு விகிதத்தை குறைத்ததால், தற்போது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது” என்று மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஆனால், “இது வட மாநிலங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 இடங்களுக்குள் உள்ளது” என்றும், “வருகின்ற 2047 ஆம் ஆண்டிற்குள் முதலிடத்தை பிடிக்கும்” என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, சென்னை ஐஐடி யில் பயில்பவர்களில் ஆண்டிற்கு 25% லிருந்து 40% வரையிலான மாணவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

























