தமிழகத்தில் மேலும் கொட்டித் தீர்க்க காத்திருக்கும் கனமழை – முன்னெச்சரிக்கை அவசியம்!
தமிழகத்தில் நேற்று முதல் அநேக இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்றைய நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய உள்ளது.
அங்கன்வாடிக்கு வந்த புதிய உத்தரவு .. இனி ஜாலி தான் – அரசின் புதிய ஏற்பாடுகள்!
நவம்பர் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் போதிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அரபிக் கடலின் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.