தமிழகத்தில் தக்காளி விலை அதிரடியாக உயர்வு.. கிலோ இவ்வளவா?? வருத்தத்தில் இல்லத்தரசிகள்!
தமிழக மக்களின் சமையலில் தக்காளிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தற்போது மழை காலம் என்பதால் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ ரூ. 90க்கு விற்பனை செய்யப்பட்டது பொது மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்றும் (அக். 15) தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
” OFFICE-க்கு வந்துட்டீங்களா… அப்போ உடனே வீட்டுக்கு கிளம்புங்க…!!! ” வானிலை ஆர்வலர் எச்சரிக்கை”..!!
அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.40 அதிகரித்து, கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி முழுவதும் மழை காலம் என்பதால் தக்காளி விலை உச்சம் தொடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் இல்லத்தரசிகள் வருத்தத்தில் இருக்கின்றனர். சின்ன வெங்காயத்தின் விலை உயர்வின் போது அரசு ரேஷன் கடைகளில் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்தது போல, தற்போது தக்காளியையும் விற்பனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


























