
” OFFICE-க்கு வந்துட்டீங்களா… அப்போ உடனே வீட்டுக்கு கிளம்புங்க…!!! ” வானிலை ஆர்வலர் எச்சரிக்கை”..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. மேலும், சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் மழை குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால்,”அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரமாக வீட்டிற்கு செல்லுங்கள்” என்று பொதுமக்களை தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மேலும், நேற்று பெய்த மழையை விட இன்று இரவு முதல் சில பகுதிகளில் 200செ.மீ வரை அதிகம் மழை பதிவாக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

























