தமிழகத்தில் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

12
தமிழகத்தில் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
தமிழகத்தில் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
தமிழகத்தில் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில் இந்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்து விட்டது. நவம்பர் மாதம் ஊரடங்கு தளர்வுகளில் தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்குகள் திறக்கப்பட்டன.

பிறகு டிசம்பர் மாதம் ஊரடங்கு அறிவித்த தமிழக அரசு அடுத்தகட்டமாக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்க அனுமதி வழங்கியது.

CBSE பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதத்திற்கு பின் நடத்தப்படும்- மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

அதன்பின் பள்ளிகள் திறப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது எப்போது பள்ளிகள் திறக்கலாம் என கல்வித்துறை குழு சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி இந்த மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் இருப்பதால் ஜனவரி 18 முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.

TNPSC முக்கிய அறிவுப்பு – Hall Ticket Download செய்ய ஆதார் எண் கட்டாயம்!!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடகா அரசுகள் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியிட்ட காரணத்தால் தமிழகத்தில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் எதிர்காலத்தை பற்றி அரசு சிந்திக்காமல், மாநில அரசும், எதிர்க்கட்சிகளும், தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, மாறுப்பட்ட கருத்துக்களை கூறி, சர்ச்சைகளை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள் திறப்பது தவிர்க்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, விரைவில், கல்வி அமைச்சர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

12 COMMENTS

  1. State government gives importance to election related things but never thinking about students education… everything is opened except schools…ellam politics.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!