தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்க்கு கொரோனா –  பள்ளியை மூடக்கோரி பெற்றோர்கள் முற்றுகை!!

2
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்க்கு கொரோனா -  பள்ளியை மூடக்கோரி பெற்றோர்கள் முற்றுகை!!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்க்கு கொரோனா -  பள்ளியை மூடக்கோரி பெற்றோர்கள் முற்றுகை!!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்க்கு கொரோனா –  பள்ளியை மூடக்கோரி பெற்றோர்கள் முற்றுகை!!

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளியில் ஆசிரியர், மாணவிகள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகளை மூடக்கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பள்ளிகளில் கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா காரணமாக 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படவில்லை. மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்க பட வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தாக்கம் பரவி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி, அலுவலக பணியாளர் மற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை – அரசு அனுமதி!!

அந்த பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளியை மூட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஒரு நாளில் 5000க்கு மேல் பதிவாகியுள்ளதாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது போல மாணவிகளுக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Really, its best idea. Can leave the 12th students as all pass. Bcz corona is spreading a lot. wat a chilly concept 10th student all pass but 12th need to write exam? uyira vida eriya vishyam yetume ila

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!