ஏப்ரல் மாதத்தில் அடுத்து வரும் 8 நாட்களில் பங்குச்சந்தை இயங்காது !
இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடர்ச்சியாக 8 நாட்கள் பங்குச்சந்தை இயங்காது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை:
பங்கு சந்தை என்பது ஒரு பொது சந்தை ஆகும். அதில் நிறுவனங்களின் பங்கு மற்றும் தொடர்பான கூறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் வியாபாரம் செய்யப்படும். இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதில் தற்போது 1500க்கு மேற்பட்ட நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய பங்கு சந்தை ஆசியாவில் இரண்டாவது பங்குச் சந்தை ஆகும்.
TN Job “FB
Group” Join Now
இதில் செயற்கை கோளை பயன்படுத்தி கணினி வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசியப் பங்குச் சந்தை, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை செயற்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படாது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் பங்கு சந்தை அடுத்து வரும் 8 நாட்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை – அரசு அனுமதி!!
அதன்படி ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை மற்றும் ஏப்ரல் 21 ராமநவமி என்பதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 10,11,17,18,24,25 போன்ற தினங்களில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் விடுமுறை நாள் என்பதால் அன்றைய நாட்களில் பங்குச்சந்தை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.