ஆன்லைனில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடத்த வேண்டும் – தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை !
நாட்டில் கொரோனாவின் நோய் தோற்று மிக அதிகமாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆன்லைன் தேர்வு:
நாட்டில் கடந்த ஆண்டு முதல் மிக அதிகமான அளவில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதால் பொதுத்தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று சுமார் ஒன்றரை லட்ச மாணவர்கள் change.org கையெழுத்திட்டு தேர்வு துறைக்கு அனுப்பியுள்ளனர்.
தமிழக மின்சாரா வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி !
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்துவது கவலையளிக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் அல்லது பொதுத்தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.