தமிழக மின்சார வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி !

1
தமிழக மின்சாரா வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு !
தமிழக மின்சாரா வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு !
தமிழக மின்சார வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு !

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது உதவி பொறியாளர் தேர்வை ஒத்திவைக்க தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

உதவி பொறியாளர் தேர்வு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல தரப்பு மக்கள் தங்களது வேலை மற்றும் வாழ்வாதாரத்தையே இழந்தனர். மேலும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசு தரப்பில் நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்வுகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அரசு பணிக்காக காத்திருந்தவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

TN Job “FB  Group” Join Now

கடந்த ஆண்டில் தமிழக மின் வாரியத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் 400, மெக்கானிக்கல் பிரிவில் 125 மற்றும் சிவில் பிரிவில் 75 என மொத்தம் 600 உதவி பணியாளர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலையில் இதில் பணியாளர்களை அமர்த்த வாரியம் முடிவு செய்தது. இதற்கு சுமார் 1 லட்ச இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு அதற்கான விண்ணப்பமும் பெறப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் தேர்வினை நடத்த முடியவில்லை.

Petrol & Diesel Rate in Chennai – இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இதன் காரணமாக இந்த தேர்வை வருகிற ஏப்ரல் 24,25 மற்றும் மே 1,2 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் மே 1 தொழிலாளர் தினர் மற்றும் மே 2 சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இதன் காரணமாக இந்த இரு நாட்களின் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வேகமெடுத்து வருவதால் பல கட்டுப்பாடு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் தேர்வையும் தள்ளிவைக்க தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here