தமிழகத்தில் 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி கொண்டிருக்கும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை வெயில் ஒரு பக்கம் கொளுத்தி வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், நெல்லை,திருப்பூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகளவில் 42வது நாடாக Flix நெட்வொர்க்கில் இணைந்த இந்தியா – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!
மேலும் நீலகிரி, கரூர், அரியலூர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. கோடை வெயில் காலத்தில் மழை பெய்வதால் மக்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.