நடப்பு நிகழ்வுகள் – 27 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 27 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 27 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 27 மே 2023

தேசிய செய்திகள்

புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவில், “75 ரூபாய்” நினைவு நாணயமானது வெளியிடப்படும் என அறிவிப்பு.
 • பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டடத்தை வரும் மே 28 அன்று  திறந்து வைக்கும் நிகழ்வில் 75 வருட சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில்  “75 ரூபாய்” நாணயமானது வெளியிடப்படும் என நிதி அமைச்சகமானது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, 35 கிராம் நாணயம், 44 மிமீ விட்டம் கொண்ட இந்த நாணயமானது வட்ட வடிவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • நாணயத்தின் வலது பக்கத்தில் “இந்தியா” என்று ஆங்கிலத்திலும், முன்பக்கத்தில் அசோகத் தூணின் சிங்க தலைநகரம் மற்றும் அதன் கீழே சத்யமேவ் ஜெயதே என்றும், இடது பக்கம் ‘பாரத்’ என்று தேவநாகிரி எழுத்திலும், இந்த நாணயத்தின் பின்புறத்தில் புதிய பாராளுமன்ற வளாகத்தின் பட அமைப்பும் அமைந்திருக்கும். என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

141.12 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்திய மற்றும் ADB கையெழுத்திட்டுள்ளன.

 • ஆந்திரப் பிரதேசத்தின் உயர்தர உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) இந்திய அரசாங்கமும் மே 25 அன்று “141.12” மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 • இந்த நிதியானது மாநிலத்தில் உள்ள மூன்று தொழிற்துறைக் குழுக்களில் சாலைகள், மின்சார விநியோக வலையமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக என நிதியமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஸ்ரீ கிரிராஜ் சிங்- SAMARTH என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார்.

 • லக்னோவில் அமிர்த மஹோத்சவின் கீழ் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் மே 25 அன்று தனது பிரச்சாரத்தை  தொடங்கியுள்ளார்.
 • முதியவர்கள் மற்றும் பெண்களிடையே “டிஜிட்டல் பரிவர்த்தனை பங்குகளை ஊக்குவிப்பதையே இந்த பிரச்சாரமானது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

ஆயுஷ் மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் இணைந்து “யுனானி மருத்துவத்தை” ஊக்குவிக்கம் திட்டம்.

 • இந்தியாவில் யுனானி மருத்துவ முறையை மேம்படுத்தவும், அதிக மக்களுக்கு கொண்டு செல்லவும் ஆயுஷ் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகங்கள் இணைந்து ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளன.
 • சிறுபான்மையினர் விவகார அமைச்சகமானது, பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJVK) திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கைக்கு ரூ. 45.34 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம், சென்னை, லக்னோ, ஹைதராபாத், சில்சார் மற்றும் பெங்களூருவில் யுனானி மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும், இந்த இடங்களில் யுனானி மருத்துவத்தின் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NHIDCL மற்றும் IIT குவஹாத்தி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 • இந்தியாவின் சாலைகளில் நிலவும் “தீவிர காலநிலை மற்றும் புவியியல் நிலைமைகளின்” கீழ் நெடுஞ்சாலைகள் கட்டுமானத் துறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்தவும், புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கவும் NHIDCL மற்றும் IIT குவஹாத்தி இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • சாலை கட்டுமானத்திற்கான “திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு” ஆகியவற்றை மேம்படுத்த  ஐஐடி குவஹாத்தியின் முக்கியமான பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R & D) எளிதாக்குவதை இந்த கூட்டுறவு ஒப்பந்தமானது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

சர்வதேச செய்திகள்

நேபாளத்தில்”போடோ ஜாத்ரா” திருவிழா ஆரம்பம். 
 • நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு இந்த “போடோ ஜாத்ரா” திருவிழாவானது கொண்டாடுகிறது. இது”ரதோ மச்சிந்திரநாத் ஜாத்ராவின்”ஒரு மாத ரத ஊர்வலத்தின் ஒரு பகுதியாகும். 
 • இங்கு இரும்பு ஆணியைப் பயன்படுத்தாமல், மரத்தால் முழுவதும் உருவாக்கப்பட்ட தேரானது புல்சோக் பகுதியில் ஊர்வலம் தொடங்கப்பட்டு, ஜ்வாலாகேலில் முடிவடைகிறது. 

பெலாரஸ் மண்ணில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 • ரஷ்யாவும் பெலாரஸும் இணைந்து ரஷ்ய தந்திரோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்த அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் மே 25 அன்று கையெழுத்திட்டுள்ளன.
 • ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆகியோருக்கு இடையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவை எதிர்க்கும் நாடுகளை கையாளும் வகையில் இந்த ஒப்பந்தமானது ஏற்படுத்தப்பட்டது. அதன்படி பெலாரஸில் “சிறிய மற்றும் குறுகிய தூர அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது”.

ஈரான் ராணுவத்தில் “புதிய தலைமுறை ஏவுகணை” அறிமுகம்.
 • 2,000 கிலோமீட்டர் மற்றும் 1,500 கிலோகிராம் எடையுள்ள போர்க்கப்பலில் பொருத்தக்கூடிய வகையிலான புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணையான கெய்பரை ஈரான் தனது ராணுவத்தில் மே 25 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
 • கெய்பர் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணையானது, “கொராம்ஷர் பாலிஸ்டிக் ஏவுகணையின்” மேம்படுத்தப்பட்ட பதிப்பு என ஈரான் அறிவித்துள்ளது. இது இஸ்ரேலுக்கான பாதிப்பு என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ரப்பர் மறுசுழற்சியின் வணிக ரீதியான உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவின் கிராவிடா நிறுவனம் தொடங்கியுள்ளது.
 • முன்னணி மறுசுழற்சி நிறுவனமான கிராவிடா இந்தியா லிமிடெட், ஒரு  கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ள துணை நிறுவனமான கிராவிடா டான்சானியா லிமிடெட்டில் “வணிக ரீதியிலான உற்பத்தி மற்றும் கழிவு ரப்பரை மறுசுழற்சி செய்வதை” தொடங்கியுள்ளது. 
 • இந்த புதிய மறுசுழற்சி ஆலையானது நிறுவனத்தின் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், கார்பன் கால்தடங்களைக் குறைக்கவும்,  குறைந்த செலவில் வசதிகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

மாநில செய்திகள்

கேரளாவானது முழுமையான மின் ஆளுமை மாநிலமாக மாறுகிறது.
 • கேரளா முதல்வர் பினராயி விஜயன் மே 25 அன்று கேரளாவானது முழுமையான மின் ஆளுமை மாநிலமாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.  1% டிஜிட்டல் கல்வியறிவை அடைவதற்கான கேரளாவின் பயணத்தில்   இது ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
 • டிஜிட்டல் பிளவை அகற்றுவது மற்றும் மாநிலத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்-ஆளுமையை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு பல்வேறு தளங்களை அமைப்பது ஆகியவை இதன் நோக்கமாகும்.  

முதல் சுரங்க ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டை மும்பையில் நடத்த திட்டம்.
 • மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரலத் ஜோஷி,  IIT மும்பை மற்றும் சுரங்க அமைச்சகமானது இணைந்து நடத்தக் கூடிய “முதல் சுரங்க ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டை” மே 29 அன்று தொடங்கி வைக்க உள்ளார்.
 • சுரங்கம் மற்றும் உலோகவியல் துறையில் திறன்களை மேம்படுத்துவது , பாதுகாப்பு மற்றும் சுயாட்சியை ஒருங்கிணைப்பது  மற்றும் புதுமைகளை உருவாக்குவவது போன்றவை  இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

2023-24 ஆம் ஆண்டிற்கான சிஐஐ தலைவராக ஆர்.தினேஷ் பதவியேற்பு.
 • டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக பணியாற்றிய “ஆர்.தினேஷ்” 2023-2024 ஆண்டுகளுக்கான “இந்திய தொழில் கூட்டமைப்பு” (CII) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 • இவர் பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த “சஞ்சீவ் பஜாஜிடம்” இருந்து இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

உடனடி “வலிப்பு மற்றும் தூக்கத்தை” தூண்டும் அல்ட்ராசவுண்ட் அலைகள் கண்டுபிடிப்பு
 • அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பாலூட்டியின் தலையை குறிவைத்து உடனடியாக “உறக்கநிலையை” தூண்டும் வகையில் புதிய அல்ட்ராசவுண்ட் அலைகள் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
 • இந்த அல்ட்ராசவுண்ட் அலைகள் உடனடியான வலிப்பு மற்றும் உறக்கநிலையை தூண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாலூட்டிகளின்  வளர்சிதை மாற்றத்தை அடக்கி, உடல் வெப்பநிலையை குறைக்கும் மற்றும் வலிப்பு, உறக்கநிலையை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய தினம்

தேசிய வெப்ப விழிப்புணர்வு தினம்
 • அதிக வெப்பத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றும் மேம்படுத்தவும் “தேசிய வெப்ப விழிப்புணர்வு தினம்” ஒவ்வொரு ஆண்டும் மே 26-ல் கடைப்பிடிக்கப்படுகிறது.
 • பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பது உறுதியளிக்கவும்(Commit to protecting the vulnerable) என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!