மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு – தமிழக அரசு பரிசீலனை!!

0
மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு - தமிழக அரசு பரிசீலனை!!
மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு - தமிழக அரசு பரிசீலனை!!
மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு – தமிழக அரசு பரிசீலனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை பொங்கல் விடுமுறைக்கு பிறகு திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்த நேரத்தில் கொரோனா வீரியம் அதிகரிக்க தொடங்கியதால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சில தேர்வுகள் முன்னரே நடத்தப்பட்டதால், நடைபெறாமல் போன தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

தமிழக மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்கள் – தேர்வு எப்போது??

மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை வைத்து 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை அடிப்படையாக கொண்டு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே சென்றதால் பள்ளிகள் திறப்பு முடிவு ஒத்திவைக்கப்பட்டு ஆன்லைன் கல்வி தொடர்ந்தது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுத்தேர்வு நடத்தி ஆக வேண்டிய கட்டாயத்தில் கல்வித்துறை உள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவகர்ளுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டு கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வை மே மாதம் நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தேர்வுகள் மாணவர்களை தயார் செய்ய வசதியாக பாடத்திட்ட குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் எப்பொழுதும் போல் இல்லாமல் இம்முறை எழுத்துத் தேர்வுக்கு பின்னர் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!