தமிழக மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்கள் – தேர்வு எப்போது??

0
தமிழக மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்கள் - தேர்வு எப்போது??
தமிழக மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்கள் - தேர்வு எப்போது??
தமிழக மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்கள் – தேர்வு எப்போது??

தமிழக மின்சார வாரியம் ஆட்சேர்ப்பு தொடர்பாக காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 1 ஆண்டு முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் நடத்தப்படாததால் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் விண்ணப்பதாரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மின்சார வாரியம் காலியிடங்கள்:

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 2400 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா நோய் தாக்கம் குறைந்து வரும் நிலையில் வாரிய தேர்வுகளும், மத்திய அரசு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மின்சார வாரிய தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடாத நிலையில் தேர்வர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

மத்திய பணி தேர்வுக்கான (SSC) இலவச பயிற்சி – மாநில வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு!!

மின்சார வாரியத்தில் உள்ள 1,300 கணக்கீட்டாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், 600 உதவி பொறியாளர்கள் அடங்கிய 2400 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த வருடம் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மே மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தனர். ஆனால் கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுகளுக்கு தயாராகி வந்தவர்கள் தேர்வுகள் நடத்தப்படுமா? இல்லையா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் மாற்றம் வேண்டும் – மாணவர்கள் கோரிக்கை!!

ஏற்கனவே மின்சார வாரியத்தில் உள்ள பராமரிப்பு பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டதால், அந்த உத்தரவை ரத்து செய்ய அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here