தமிழகத்தில் இன்று (செப்.21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் தொடர்ந்து 488 வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியில் இருக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை:
தமிழகத்தில் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு முக்கிய தேவையாக பெட்ரோல், டீசல் இருக்கிறது. இந்நிலையில் இதன் விலையானது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது. கடந்த ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து பொதுமக்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அடித்து வெளுக்கும் கனமழை – சென்னைக்கு விடுமுறை இல்லை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்நிலைய 2022 ஆண்டு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் விலை ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே விலை தற்போது வரை மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் 488 நாளாக இன்று (செப்.21) பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியில் இருந்தாலும், விலை குறைய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.