தமிழகத்தில் அடித்து வெளுக்கும் கனமழை – சென்னைக்கு விடுமுறை இல்லை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சென்னையில் இன்று அதிகாலையில் இருந்தே மழை பெய்து வரும் நிலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, சென்னையில் இன்று அதிகாலையில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக வேளச்சேரி, வேப்பேரி, தாம்பரம், போரூர், அடையாறு, துரைப்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பதிவாகியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருந்தனர். ஆனால், காலை முதல் இடைவிடாது மழை பெய்து வரும் நிலையிலும் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.