மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடக்கம் – மருத்துவ கல்வி இயக்ககம்!!

0
மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடக்கம் - மருத்துவ கல்வி இயக்ககம்!!
மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடக்கம் - மருத்துவ கல்வி இயக்ககம்!!
மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடக்கம் – மருத்துவ கல்வி இயக்ககம்!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வருகிற ஜனவரி 20-ஆம் தேதி முதல் அறிமுக வகுப்புகள் தொடங்கவுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் இதர மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகள் திறப்பு:

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் மருத்துவ கல்லூரி பணியிடங்கள் நிரப்பப்பட்டு சேர்க்கைகள் முடிவடைந்தன. இந்நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடங்க மருத்துவ கல்வி அலுவலம் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களும் தடுப்பூசி போடும் பணிகள் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை, “ஜனவரி 20-ஆம் தேதி முதல் மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு அறிமுக வகுப்புகள் மட்டும் தொடங்க வேண்டும். மற்ற முறையான வகுப்புகள் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் தொடங்கலாம். மாணவர்களுக்கான கொரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் மற்ற மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி!!

மருத்துவ படிப்புகளில் நடைபெறும் ஆள்மாறாட்டங்களை தடுக்க மாணவர்கள் அனைவருக்கும் கல்வி, ஜாதி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் பெருவிரல் ரேகை மற்றும் கண்விழி திரை பதிவு செய்ய வேண்டும். மாணவரின் சமீபத்திய புகைப்படம் பெற வேண்டும். இவை அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலமாக பதிவு செய்து மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும்”, இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here