தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – நாளை (ஜூலை 7) முதல்வர் ஆலோசனை!

0
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - நாளை (ஜூலை 7) முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - நாளை (ஜூலை 7) முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – நாளை (ஜூலை 7) முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து நாளை (ஜூலை 7) முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

உரிமைத்தொகை அறிவிப்பு

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், செப்டம்பர் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்காக ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூலை 7) ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவிப்பு – பெட்ரோல், டீசல் விலை பட்டியல் வெளியீடு!

இந்த ஆலோசனை கூட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு காணொளி மூலமாக நடைபெறும் எனவும், இதில் இந்த திட்டத்தை செல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்டஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும் பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் நிலையில் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இந்த திட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன் இந்த திட்டம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!