தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!!

0
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!!
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!!
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களுக்கான நலத்திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியீடு:

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியும்,  வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் வாக்காளர் பட்டியல், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையமும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி, வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அரசியல் கட்சிகள் மக்கள் நலனுக்காக பல்வேறு நல திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக கல்வித்துறை சம்மந்தமான நல திட்டங்கள், பெண்களுக்கான நல திட்டங்கள், அரசு ஊழியர்களுக்கான நல திட்டங்கள் போன்றவற்றை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா – தஞ்சாவூரில் பதற்றம் !

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை:

  • தமிழகத்தில் முற்றிலுமாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
  • பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமஉரிமை வழங்கப்படும்.
  • வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • தமிழக மீனவர்கள் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.
  • மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.
  • மாநில தகவல் ஆணையத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா – தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க சுகாதாரத்துறை அறிவிப்பு!!

  • தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக காவிரி நீர் மேலாண்மை வாரியம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கிராமப்புறங்களில் சிறு தொழில்களை ஊக்குவிக்க 25 சதவிகித மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும்.
  • குடும்பத்தின் குடும்பத்தலைவர் வயதில் மூத்தவராக இருந்தால் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.

சித்தா நர்சிங் படிப்புகளுக்கான நீட் தேர்வு – ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்!!

  • அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராக பணியாற்றலாம்.
  • தபால் மூலமாக முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் ஆவண படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்.
  • மக்களுக்கு மின் தேவைகளுக்கு ஏற்றார் போல மின் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

12ம் வகுப்பு மாதிரி தேர்வுகள் தொடக்கம் – குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம்!!

  • மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
  • பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!