
தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் 47 பேர் பாதிப்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. தேங்கி இருக்கும் மழைநீரில் டெங்கு கொசு அதிகமாக உற்பத்தியாகி இருக்கிறது. அதனால் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
WhatsApp பயனர்களுக்கு மீண்டும் ஒரு புதிய வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!
அதில் நேற்று (நவ. 8) ஒரே நாளில் 47 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 30ம் தேதி வரை டெங்கு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனையில் 511 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.