SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Specialist Cadre Officers (Business Analyst) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Specialist Cadre Officers (Business Analyst) பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசில் ரூ.30,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
- வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- General/ OBC/ EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.750/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.