WhatsApp பயனர்களுக்கு மீண்டும் ஒரு புதிய வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!
WhatsApp பயனர்களுக்கு அழைப்புகளின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்க புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய வசதி
மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான வாட்ஸ்ஆப்பில் தனியுரிமை பாதுகாப்பு தேவைப்படும் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அழைப்புகளில் ஐபி முகவரியைப் பாதுகாக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அழைப்பின் மறுபக்கத்தில் இருப்பவர்களிடமிருந்து உங்கள் ஐபியைப் பாதுகாக்கிறது.
TNPSC தேர்வு நெருங்கியாச்சு.. Slow Learner பட்டதாரிகளே.. உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
இந்த வசதி மூலம் அழைப்புகள் வாட்ஸ்அப் சேவையகங்கள் மூலம் ரிலே செய்யப்படும். அதனால் உங்களுடைய உண்மையான ஐபி முகவரி மறைக்கப்படும். தற்போது மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான அழைப்புத் தயாரிப்புகள் பங்கேற்பாளர்களிடையே பியர்-டு-பியர் இணைப்புகளைக் கொண்டுள்ளன. இதன் மூலம் வேகமான தரவு பரிமாற்றம் மற்றும் சிறந்த அழைப்பு தரத்தை அனுமதிக்கிறது. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் ஐபி முகவரிகளை அறிந்து கொள்ள முடியும். இருந்தாலும் சில பயனர்களுக்கு தனியுரிமை தேவைப்படும் என்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.