தமிழகத்தில் குறைந்து வரும் வேலையின்மை விகிதம் – முதல்வர் ட்வீட்!!

0
தமிழகத்தில் குறைந்து வரும் வேலையின்மை விகிதம் - முதல்வர் ட்வீட்!!
தமிழகத்தில் குறைந்து வரும் வேலையின்மை விகிதம் - முதல்வர் ட்வீட்!!
தமிழகத்தில் குறைந்து வரும் வேலைவாய்ப்பின்மை விகிதம் – முதல்வர் ட்வீட்!!

கொரோனா ஊரடங்கின் போது வேலையின்மை விகிதம் குறைந்து வந்த நிலையில் அது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

வேலையின்மை விகிதம்:

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வணிக நிறுவனங்கள் பல மாதங்களாக திறக்கப்படாததால் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாக இருந்தது. தற்போது இந்திய பொருளாதாரத்தை கணக்கிடும் மையம் வெளியிட்டுள்ள அறிவின்படி, இந்தியாவில் வேலையின்மை சதவிகிதம் முழு ஊரடங்கு அறிவித்ததற்கு முன் ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவீதமாக இருந்தது.

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!

ஊரடங்கிற்கு பின் ஜூன் மாதத்தில் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்கடுத்து செப்டம்பரில் 5 சதவீதமாகவும், அக்டோபரில் 2.2 சதவீதமாகவும், நவம்பரில் 1.1 சதவீதமாகவும் வேலையின்மை விகிதம் குறைந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் வேளாண், தொழில்துறை, சேவைத்துறை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வேலை வாய்ப்புகளின் காரணத்தால் இந்த விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்!!

வேளாண் உற்பத்தியில் பெரிய மாநிலமான குஜராத் மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3.9% இருந்து 3% ஆக குறைந்துள்ளது. மராட்டிய மாநிலத்தின் வேலையின்மை விகிதம் நவம்பர் 3.1% மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு 3.9% ஆக உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பு கணக்கெடுப்பில் ஒருவர் ஒரு மாதத்தில் சம்பளம் பெற்றிருந்தாலும் அவர் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “அடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகள், அடுத்தடுத்து மேற்கொள்ளும் முதலீட்டு ஒப்பந்தங்கள், முடுக்கி விடப்பட்ட தொழில்சூழல், செழித்து நிற்கும் விவசாயம் விளைவாக, 5 ஆண்டுகளில் மிகக்குறைந்த வேலையின்மை விகிதம் தமிழகத்தில் 0.5 சதவீதம்  ஆக குறைந்துள்ளது. மக்களின் மகிழ்ச்சியோடு வெற்றிநடைபோடும் தமிழகம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!