தமிழக பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் – 23,000 ஊழியர்கள் தயார்நிலை!
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் 23 ஆயிரம் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. டிசம்பர் மாத இறுதி வரையிலும் பருவமழை நீடிக்கும். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Degree முடித்தவரா நீங்கள்… Flipkart நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பரான வாய்ப்பு!
ஒப்பந்தாரர்கள் சரியான முறையில் பணியாற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மண்டல அலுவலர்கள் தலைமையில் வார்டுக்கு பத்து ஊழியர்களை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஒரு சில பகுதிகளில் மழை நீரை அகற்றுவது சவாலான காரியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.