
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கம்? துணைவேந்தர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தமிழ் வழி பாட பிரிவுகளை நீக்குவது குறித்தும், BE சிவில் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளை நீக்குவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி BE சிவில் மற்றும் மெக்கானிக்கல் பட்டப்படிப்புகளில் குறைந்த அளவில் மாணவர்கள் சேருவதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என பல்கலைக்கழக கல்வி குழு பரிந்துரை செய்தது. மாணவர்களின் வசதிக்காக இந்த பாட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதில் கடந்த ஆண்டு குறைவான மாணவர்களே சேர்ந்து இருக்கின்றனர். அதனால் அண்ணா பல்கலைக்கழக 11 உறுப்புக் கல்லூரிகளில் நடத்தப்படும் தமிழ் வழியிலான பிஇ சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் இந்த கல்வி ஆண்டில் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் ஆங்கில வழியில் நடத்தப்படும் பிஇ சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகள் 4 உறுப்புக் கல்லூரிகளில் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
ICMR- NIRRCH நிறுவனத்தில் மாதம் ரூ.32,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 16 உறுப்பு கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக் பாடப்பிரிவுகளில் 10 க்கு குறைவான மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். அதனால் இந்த பாடப்பிரிவுகளை நீக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தமிழ் வழி பாடப்பிரிவுகளை நீக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல, புதிய பாடங்களை அறிமுகப்படுத்தி மாணவர்கள் குறைவாக உள்ள பாடங்களை நீக்க திட்டமிட்டோம். ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, இந்தக் கல்வி ஆண்டு எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது எனவும் வெளியான அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது எனவும் அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.