
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பேருந்து ஓட்டுனர் நியமனம் நிறுத்திவைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்கள் பணிநியமனம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்த ஓட்டுனர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பணி நியமனம்:
தமிழகத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகம், கும்பகோணம் போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் ஒப்பந்தம் அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பிற்கு சிஐடியு தொழிலாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாகவும் அதற்கான நோட்டீஸை அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் சிலிண்டர் விலை திடீர் குறைவு – இன்றைய நிலவரம்! ரூ.1,118க்கு விற்பனை!
இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வது தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்கள் பணி நியமனம் செய்யப்படுவது நிறுத்தி வைப்பதாக நிர்வாகத்தின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அ. சௌந்தரராஜன் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.