விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ பிரபலத்திற்கு விரைவில் திருமணம் – வெளியான புகைப்படங்கள்!

0
விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' பிரபலத்திற்கு விரைவில் திருமணம் - வெளியான புகைப்படங்கள்!
விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' பிரபலத்திற்கு விரைவில் திருமணம் - வெளியான புகைப்படங்கள்!
விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ பிரபலத்திற்கு விரைவில் திருமணம் – வெளியான புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் மாளவிகா ராஜேஷ். அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் ஆன நிலையில், சில மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அவர் தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் பிரபலம்:

விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் பலர். பட்டி தொட்டி எங்கும் நல்ல குரல் வளம் உள்ள பலர் இந்த நிகழ்ச்சி மூலமாக கலந்து கொண்டு சினிமாவில் பாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 7 சீசன் முடிந்துள்ள நிலையில், 8வது சீசன் நடைபெற்று வருகிறது. தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் விஜே தீபிகா விலகியதற்கான காரணம் – அவரே சொன்ன விளக்கம்!!

மேலும் கடந்த வாரத்தில், வைல்ட் கார்ட் சுற்று முடிந்ததுள்ள நிலையில், ஒரு சில வாரங்களில் இறுதிப் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் நன்றாக பாடும் பல போட்டியாளர்கள் இருப்பதால் யாரு சூப்பர் சிங்கர் பட்டத்தை எடுத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடல் திறமை மூலமாக பிரபலமானவர் மாளவிகா ராஜேஷ்.

ஜீ தமிழ் ‘சர்வைவர்’ : தொடக்கத்திலேயே சண்டையிடும் பார்வதி & ஸ்ருஷ்டி – வெளியான ப்ரோமோ!

அவர் வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் மகள் ஆவார். அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரது திருமணம் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மோகன் வைத்யாவின் சகோதரர்தான் ராஜேஷ் வைத்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!