ஜீ தமிழ் ‘சர்வைவர்’ : தொடக்கத்திலேயே சண்டையிடும் பார்வதி & ஸ்ருஷ்டி – வெளியான ப்ரோமோ!

0
ஜீ தமிழ் 'சர்வைவர்' : தொடக்கத்திலேயே சண்டையிடும் பார்வதி & ஸ்ருஷ்டி - வெளியான ப்ரோமோ!
ஜீ தமிழ் 'சர்வைவர்' : தொடக்கத்திலேயே சண்டையிடும் பார்வதி & ஸ்ருஷ்டி - வெளியான ப்ரோமோ!
ஜீ தமிழ் ‘சர்வைவர்’ : தொடக்கத்திலேயே சண்டையிடும் பார்வதி & ஸ்ருஷ்டி – வெளியான ப்ரோமோ!

தமிழ் சின்னத்திரையில் சர்வதேச நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். பிக்பாஸ், மாஸ்டர்செஃப் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் சர்வைவர் நிகழ்ச்சி ஜீ தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இன்ட்ரோ எபிசோட் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் நாள் நிகழ்ச்சியிலேயே பார்வதிக்கு அவர்களின் டீம் உடன் முட்டிக் கொண்டுள்ளது. இன்றைய எபிசோடில் நடக்க உள்ள நிகழ்வுகள் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

சர்வைவர் நிகழ்ச்சி:

‘பிக்பாஸ்’, ‘மாஸ்டர்செஃப்’ போன்ற சர்வதேச நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் கலந்து கொண்டுள்ளார். இதனால் இதில் என்ன தான் நடக்கும் என்ற ஆர்வம் மக்களிடம் தோன்றியது. இந்த நிகழ்ச்சி 90 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்கள் இயற்கை வளம் சூழ்ந்திருக்கும் ஒரு தனித்தீவில் விடப்படுவார்கள். மிக அடிப்படையான பொருட்கள் மட்டுமே அவர்களுக்கு தரப்படும். மற்றபடி சமையலுக்கான நெருப்பு முதல் பல விஷயங்களை காட்டுக்குள் அவர்கள் தேடிக்கொள்ள வேண்டும்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதிய நடிகை அறிமுகம் – இனி இவருக்கு பதில் இவர்!

இரு தீவில் இரு டீம் போட்டியாளர்களை விட்டுள்ளனர். நேற்றைய எபிசோடில் ஒரு டீமில் இருக்கும் பார்வதிக்கும் அம்ஜத் கான் அவர்களுக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் பார்வதி அப்போது ஸ்ருஷ்டி டாங்கே பக்கம் திரும்பினார். மேலும் நேற்றைய எபிசோடில் அனைவரும் இணைந்து தங்குவதற்கும், சாப்பாட்டிற்கு வழி செய்தனர். கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பார்வதியும் – ஸ்ருஷ்டி டாங்கேவும் வார்த்தைகளால் மோதிக்கொள்கின்றனர். கடற்கரைக்குள் ஓடிவரும் போது ஒருவர் விழுந்தது தொடர்பாக இருவருக்கான வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியும் சண்டை, வாக்குவாதம் என பிக் பாஸ் போல இருக்கும் போல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் டிவி “பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் களமிறங்கும் போட்டியாளர்கள் – வெளியான பட்டியல்!

இரண்டு ட்ரைபுகளாக (Tribe) பிரிக்கப்படும் இரண்டு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நிகழும். இவற்றில் வெல்வதற்கேற்ப எக்ஸ்ட்ரா வசதிகள் கிடைக்கும். மேலும் போட்டியில் தொடர்வதற்கான, தங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான விஷயங்களை (Immunity) அடைவார்கள். பிக்பாஸ் நாமினேஷன் போலவே இதிலும் Tribal Council-ல் ஒருவரை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். இது தான் அடிப்படை விதி. மற்றபடி பிற எக்ஸ்ட்ரா விதிகளும் உண்டு. தங்களுக்குள் சண்டையிட்டு அடித்துக் கொண்டால் போட்டியிலிருந்து அவர் உடனே விளக்கப்படுவார்கள் என்ற விதியும் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here