ஞாயிறு (நவ.19) அரசு ஊழியர்களுக்கு வேலை நாள் – அதிரடி உத்தரவு!
கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் நவ கேரளா சதஸ் நிகழ்ச்சியில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நாள்:
கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மற்றும் அமைச்சர்கள் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கு நவ கேரளா சதஸ் நிகழ்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுப்பயணம் மாவட்ட வாரியாக நடைபெற்று, வரும் நவம்பர் 18 சனிக்கிழமை அன்று மஞ்சேஸ்வர் தொகுதியிலும், நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று காசர்கோடு, கன்ஹாங்காடு, உத்மா, திரிகரிப்பூர் ஆகிய தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் அனைத்து துறைகளின் மாவட்ட தலைவர்கள் தங்கள் தொகுதியில் உள்ள நவ கேரளா சதாக்களில் அந்தந்த பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் – தயாரிப்பு பணி தீவிரம்!!
அனைத்து அரசு ஊழியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்கள் அனைவரும் இதனை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காசர்கோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.