பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் – தயாரிப்பு பணி தீவிரம்!!
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வரும் நோக்கில் பாடத்திட்டங்கள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதிய பாடத்திட்டம்:
தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் பாட திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல் உள்ளிட்ட பாடத்திட்டங்களை உருவாக்கம் செய்து விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கற்றல் பொருள் குழு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ‘இவர்களுக்கு’ புதிய ரேஷன் கார்டு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்காக NCERT குழுவின் தலைமையில் 35 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாட புத்தகங்கள் அனைத்தும் விரைவில் தயார் செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டில் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் ஆசிரியர்களின் கேயேடுகளை சமர்ப்பிக்க உத்தடவிடப்பட்டுள்ளது.