நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயார் – ஆளுநர் தகவல்!!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி விட்டதாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று 2013ம் ஆண்டு மத்திய அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. நீட் தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தின் வழி பயின்ற மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் மருத்துவர் கனவை கொண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
வீட்டு வசதி திட்டம் மூலம் 2.32 லட்சம் வீடுகள் – அமைச்சர் முக்கிய தகவல்!
இதனால் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமீபத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வீதம் 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கியுள்ளது. இது குறித்து மதுரை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி விட்டனர். கையெழுத்து இயக்கங்கள் மூலம் எதுவும் செய்ய முடியாது. நீட் தேர்வை தடுக்க முடியாது என்று பேசியுள்ளார்.