ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டாரா பிரதீப்? சுட சுட வந்த அப்டேட்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில் இந்த வாரம் கமல் சார் எபிசோடில் பிரதீப் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியிற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7
தமிழ் சின்னத்திரையில் அனைவரின் எதிர்பார்ப்பை ஈர்த்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த ஆண்டு சீசன் 7 தொடங்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்கள் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என கடுமையாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சென்ற வாரம் 5 வைல்டு கார்டு என்ட்ரி இருந்தது. அதனால் போட்டியே தலைகீழாக மாறிவிட்டது என சொல்லலாம்.
நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயார் – ஆளுநர் தகவல்!!
இந்த வார சனிக்கிழமை எபிசோடிற்கான ப்ரோமோ வெளியானது. அதில் அனைவரும் பிரதீப்பிற்கு எதிராக உரிமைக்குரல் கொடுத்தனர். கமல் சார் அதனை விசாரிக்க அனைவரும் குற்றசாட்டு வைத்தனர். பின் கன்பசன் ரூமில் வைத்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கலாமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதன் முடிவு என்னவென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் பிரதீப் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.