தமிழகத்தில் சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்காத வண்ணம் சாலை பணிகளை விரைவில் முடிக்கும்படி முதல்வர் அறிவித்துள்ளார்.
சாலை பணி:
தமிழகத்தில் உள்ள சாலைகள் பழுதடைந்து மழை நீர் தேங்கி வரும் நிலையில் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உடனடியாக பணிகளை துரிதப்படுத்தும்படியும், கூடிய விரைவில் பணியினை முடிக்கும்படியும் முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று பரவி வரும் நிலையை அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து பொதுமக்களுக்கும் தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆண் குழந்தைகளுக்கான அருமையான அஞ்சலக திட்டம் – இரட்டிப்பு லாபம்! 8.5% வட்டி விகிதம்!
அடுத்ததாக, அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு துறை மண்டல குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை துவங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் எனவும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கும்படியும் முதல்வர் அறிவித்துள்ளார்.