ஆண் குழந்தைகளுக்கான அருமையான அஞ்சலக திட்டம் – இரட்டிப்பு லாபம்! 8.5% வட்டி விகிதம்!
ஆண் குழந்தைகளுக்கு பிற்கால தேவைக்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்கள் 8.5% வட்டி விகிதம் வழங்கும் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
அஞ்சலக திட்டம்:
வங்கி சேமிப்பு திட்டங்களை காட்டிலும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் லாபத்தினை வழங்குவதால் பல்வேறு முதலீட்டுதாரர்கள் அஞ்சலக திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், குறிப்பாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், பெண் குழந்தைகளுக்கு சேமிக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பதை போல ஆண் குழந்தைகளுக்கும் செல்வ மகன் சேமிப்பு திட்டம் அமலில் இருந்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, 10 வயது பூர்த்தி அடைந்த ஆண் குழந்தையின் பெயரிலேயே பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்க இயலும். ஆனால்,10 வயதுக்கு முன்பாகவே குழந்தையின் பெயரில் கணக்கு துவங்க விரும்பினால் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கணக்கு துவங்கலாம். குழந்தைக்கு 10 வயதான பிறகு குழந்தையின் பெயரில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
நோயாளியை கோமா நிலைமைக்கு தள்ளும் நிபா வைரஸ் – பொதுமக்களே உஷார்!
ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்து கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் ஆண்டு வட்டியாக பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும், முதலீடு செய்த தொகையை படிப்பு செலவு அல்லது பிற செலவுகளுக்காக கணக்கு துவங்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.