தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய தொழில்பயிற்சி – இப்போவே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கத்தொடையுடன் கூடிய வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பயிற்சி:
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கான பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு தரப்புகளில் இருந்தும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானிய கோரிக்கையின் போது அரசு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூபாய் 1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் ஆணை ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
Follow our Twitter Page for More Latest News Updates
இத்திட்டத்தின் மூலமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலில் தொழில்நுட்பங்களை பயிற்சி வாயிலாக கற்பித்தல், கைத்தறி பொருள்களின் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல் போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளது. திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 250 வீதம் 45 நாட்கள் பயிற்சி காலம் முழுவதும் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை – முதல்வர் அறிவிப்பு!
இதற்காக கிராமப் புறத்தில் உள்ள இளைஞர்கள் முதற்கட்டமாக 300 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செப்டம்பர் 20ஆம் தேதி ஆன நாளைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.