மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு எப்போது? – மசோதாவில் முக்கிய தகவல்!
மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டிற்காக இன்று மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இட ஒதுக்கீடு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டிற்காக அரசியல் சாசனத்தில் 128 வது முறையாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 239AA, 330A, 332A, 334A ஆகிய பிரிவுகள் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, நேரடி தேர்தல் மூலமாக இட ஒதுக்கீடு நிரப்பப்பட்டு வரும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு வழங்க இருப்பதாகவும், சுழற்சிமுறை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா அறிவுறுத்தியுள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய தொழில்பயிற்சி – இப்போவே விண்ணப்பியுங்கள்!
அதே நேரத்தில் 2024ம் ஆண்டு தேர்தலில் 33% இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டம் அமலான பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மசோதாவின் நகலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று தாக்கலாகியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெருமிதமடைந்துள்ளார்.