SSC CGL Tier 1 2023 தேர்வு முடிவுகள் – வெளியீடு!!

0
SSC CGL Tier 1 2023 தேர்வு முடிவுகள் -
SSC CGL Tier 1 2023 தேர்வு முடிவுகள் -
SSC CGL Tier 1 2023 தேர்வு முடிவுகள் – வெளியீடு!!

பணியாளர் தேர்வாணையம் (SSC) 2022-23 ஆம் ஆண்டுக்கான SSC CGL தேர்வு முடிவுகளை இன்று, பிப்ரவரி 9 ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள்

பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு அடுக்கு 1 (CGL Tier 1) க்கான முடிவுகளை இன்று (பிப்ரவரி 9) வெளியிட்டுள்ளது. இப்போது, SSC CGL முடிவுகளை விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன்னதாக SSC CGL 2022 அடுக்கு 1 தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் 13 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

SSC தேர்வர்கள் கவனத்திற்கு – GD Constable காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியீடு!

இந்த தேர்வு மூலம் உதவி தணிக்கை அதிகாரி (AAO) (லிஸ்ட்1), ஜூனியர் புள்ளியியல் அதிகாரி (JSO) மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்யப்பட இருக்கிறது. இப்போது, SSC CGL அடுக்கு 1 தேர்வு முடிவு கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் இன்று வெளியாகியுள்ளது. SSC CGL அடுக்கு 1 தேர்வில் விண்ணப்பதாரர்கள் எடுத்த மொத்த செயல்திறனின் அடிப்படையில், அவர்கள் அடுக்கு 2 தேர்வுக்கு வகை வாரியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSC CGL தேர்வு முடிவுகளை சரிபார்க்க:

  • முதலில் SSC இன் https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அங்கு CGL முடிவு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இப்போது “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு 2022” முடிவு இணைப்புகளை கிளிக் செய்யவும்.
  • திரையில் தோன்றும் SSC CGL முடிவுகளை பதிவிறக்கி PDF கோப்பில் சேமிக்கவும்.
  • தொடர்ந்து SSC CGL அடுக்கு 1 முடிவு கோப்பை திறக்கவும்.
  • இதில் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் காண்பிக்கப்படும்.
  • இப்போது, ​​Ctrl+F கீயை அழுத்தி பெயர் அல்லது ரோல் எண்ணை உள்ளிடவும்.
  • இந்த பட்டியலில் பெயர் மற்றும் ரோல் எண் இடம்பெற்றிருக்கும் நபர்கள் SSC CGL அடுக்கு 1 தேர்வில் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

Download Result

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!