பயனர்கள் கவனத்திற்கு – ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

0
பயனர்கள் கவனத்திற்கு - ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி
பயனர்கள் கவனத்திற்கு - ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி
பயனர்கள் கவனத்திற்கு – ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

மத்திய அரசு வழங்கி வரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்வது எப்படி என்ற எளிய வழிமுறைகளை இப்பதிவில் விரிவாக காணலாம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கியமான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டுகள். முதலில் அட்டை வடிவில் கொடுக்கப்பட்டு வந்த இந்த ரேஷன் கார்டுகள் இப்போது ஸ்மார்ட் கார்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அரசு தரும் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பை போல ரேஷன் கார்டுகளை புதிதாக பெற்றுக்கொள்வதற்கு நாம் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலையத்தேவையில்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஏனென்றால் இந்த சேவைகள் அனைத்தும் தற்போது இணையம் மூலம் எளிதாக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில், தற்போது TNPDS என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பயனர்கள் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான எளிய வழிமுறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தொடக்கப்பள்ளிகளில் காலியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

  • முதலில் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பின் TNPDS வலைத்தளத்தை திறக்கவும்.
  • அங்கு, Smart Card Application என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பிறகு, குடும்பத் தலைவரின் பெயர், அடையாள அட்டை மற்றும் முகவரி போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • தொடர்ந்து LPG கேஸ் விவரங்களை உள்ளிட்டு Submit கொடுக்க வேண்டும்.
  • இப்போது ஒரு குறிப்பு எண் உங்களுக்கு அனுப்பப்படும்.
  • இந்த குறிப்பு எண்ணை பயன்படுத்தி ஸ்மார்ட் கார்டின் நிலையை கண்காணிக்கலாம்.

முக்கிய ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை.
  • வாக்காளர் அடையாள அட்டை.
  • பான் கார்டு.
  • புகைப்படம்.
  • சாதி சான்றிதழ்.
  • வருமான வரி சான்றிதழ்.
  • மின் ரசீது.
  • கேஸ் பில் ஆகியவை விண்ணப்பிக்க தேவைப்படும் முக்கியமான ஆவணங்கள் ஆகும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!