தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்’. ‘தமிழகத்தில் கடந்த ஆண்டும் இதே அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது’.
TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற எளிய வழி.. உங்களுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்புகள்!!
‘அதேபோன்று இந்த ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி 1000 இடங்களில் ஒரே நாளில் தமிழகம் முழுவதும், சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்கள் என்கிற வகையில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்’. ‘மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



























