ஜம்மு காஷ்மீர் & ஹரியானா தேர்தல் முடிவுகள் 2024: ஹாட்ரிக் வெற்றி பெற்ற பா.ஜ.க.. முழு விவரம் உள்ளே!!
ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
ஹரியானாவில் மாலை 6 மணி நிலவரப்படி காங்கிரஸ் 33 தொகுதிகளில் வெற்றி பெற்று 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 41 தொகுதிகளில் வெற்றி பெற்று 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஹரியானாவில் பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில், இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகள், காங்கிரஸ் 6 தொகுதிகள், சி.பி.எம். 1 தொகுதி என வெற்றி பெற்றுள்ளன.
அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி!!
இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பொறுப்பேற்பார் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


























